Friday, October 26, 2018

மனைவி இன்றிரவு உங்களோடு உறவில் ஈடுபட விரும்புகிறார் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்

மனைவி இன்றிரவு உங்களோடு உறவில் ஈடுபட விரும்புகிறார் என்பதை சில அறிகுறிகள் மூலம் உணர்த்துவார்கள்.

ஆண்களுக்கு தான் எல்லாம் தோன்றும் என நினைப்பது தவறு. ஓர் ஆய்வில் ஆண்களை விட உறவில் ஈடுபட மிகுந்த விருப்பம் கொண்டவர்கள் பெண்கள் தான் என்று தெரியவந்துள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் நாம் பெண்களை கடவுளுக்கு இணையாக மதிப்பதால் அவர்கள் அதை பெரும்பாலும் வெளிப்படையாக கூறுவது இல்லை.

மற்றும் உடலுறவில் ஈடுபடுவது, நாட்டம் கொள்வது என்பது தவறானது அல்ல. இது மனிதர்கள், மிருகங்கள் என அனைவரிடமும் எழும் சாதாரன உணர்வு தான் இது. அந்த வகையில் வெளிப்படையாக கூற மனமில்லாத பெண்கள், அதை எந்த அறிகுறிகளின் மூலம் வெளிப்படுத்துகிறார்கள் என்பது பற்றி இனிக் காண்போம்…..

* உங்கள் துணை, உங்களை பார்த்த படியே இடையில் ஒரு கையை வைத்துக் கொண்டு கண்களால் உங்களை கவ்வியப்படி பார்ப்பது முதல் அறிகுறி.

* இரவு உங்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது, பேச்சை கவனிக்காது அவ்வப்போது பெருமூச்சு விட்டபடி இருக்கிறார் என்றால் அது தான் இரண்டாவது அறிகுறி.

* தன்னை தானே கட்டிபிடித்து அமர்ந்திருப்பது உங்கள் தோள்களை கட்டிப்பிடித்திருக்க வேண்டிய கைகள், தன்னை தானே கட்டியணைத்து, தனிமையில் விடப்பட்டது போல கொஞ்சம் இடைவெளி விட்டு அமர்ந்திருப்பது மூன்றாவது அறிகுறி. இங்கே நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். (இல்லாங்காட்டி…. அம்புட்டு தான்..)

* நீங்கள் படுக்கையறையில் உடனிருக்கும் போதும், தானாக தனக்கு தானே உளறுவது நான்காவது அறிகுறி.

– பெரும்பாலும் இந்த அறிகுறி எல்லா பெண்களிடமும் எதிர்பார்க்க முடியாது. ஆனந்த கூத்து என்பது போல, சில அசைவுகளை வெளிப்படுத்துவது தான் இந்த கடைசி அறிகுறி. இதிலும் நீங்கள் கண்டுக்கொள்ளவில்லை எனில், உங்களுக்கும் ஓர் நேரம் வரும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

பெண்களுக்கு தங்களுக்கு ஏற்படும் பாலியல் ஆசைகளை தங்கள் கணவருக்கு மறைமுகமாகதான் உணர்த்துவார்கள். அதை நாசூக்காக ஆண்கள் புரிந்து கொண்டால் அன்றைய இரவு மன்மத கொண்டாட்டம் தான்.

Thursday, October 25, 2018

கசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்? ..!!

திருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை.

இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது.

இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை காட்டிலும் மோசமானதும் அருவருப்பானதும் ஆகும். இது வாழ்க்கைத் துணைக்கும், குழந்தைகளுக்கும் துரோகம் இழைக்கும் செயலாகும்.

இது ஒன்றும் புதிதல்ல. நீண்ட காலகமாகவே சமூகத்தில் இருந்து வருகின்ற கூட உறவு ஆகும். இன்று இவற்றின் எண்ணிக்கை பன்மடங்காகி விட்டது.

முன்பு இந்த உறவுகள் கிசுகிசுச் செய்திகளாக மட்டுமே இருந்தன.இப்போதோ நாளிதழ்களுக்குத் தீனி போடுகின்ற அளவிற்கு வெளிப்படையாகவே நடைபெறுகின்றன.முன்உ இதை வெளியில் சொல்ல வெட்கப்பட்டனர்.

இப்போது வெளியில் தெரிந்தாலும் அதைப்பற்றி அலட்டிக் கொள்வதில்லை.

கள்ளக்காதல் ஆபாசம் அசிங்கம் என்ற நிலைகளையும் தாண்டி வன்முறையில் முடிகின்றது.

முந்தைய கணவன் மனைவியைக் கொல்லுதல், கள்ளக் காதலனையோ காதலியோ ஆளை வைத்து தீர்த்துக் கட்டுதல்,உறவுக்கு தடையாக இருக்கும் பிள்ளைகளை பெற்றோர்களே கொல்லுதால் என்ற அளவிற்கு நிலமை மோசமாகிக் கொண்டே போகிறது.

அரசனை நம்பி புருசனை விட்ட கதையாக பல பெண்களின் வாழ்வு பாழாகிப் போகின்றது. வழக்கம்போல் இதிலும் அதிக பாதிக்கப்படுவது பெண்களே!

அவமானம் தாங்க முடியாமல் இறுதியில் தற்கொலை செய்து கொள்வதால் எதுமறியா குழந்தைகள் அனாதைகளாகி நடுத்தெருவில் நிற்கின்றன.

மக்களிடையே ஒழுக்க மாண்புகள் குறைந்து போனதே இதற்குக் காரணம் என்று ஒற்றை வரியில் இந்தப் பிரச்சனையை அடக்கிவிட முடியாது.

பொருந்தாத திருமணங்கள் ஏமாற்றத்தில் முடிவடைகின்றன. பணப்பெருத்தமும், ஜாதகப் பொருத்தம்,குடும்பப்பொருத்தம், ஜாதி, குல, கோத்திரப் பொருத்தம் பார்க்கின்றார்கள் ஆனால் மனப் பொருத்தம் பார்க்க தவறிவிடுகின்றனார்.

படிப்பு,அறிவு,அழகு, பொழுதுபோக்கு,வேலைக்குச் செல்லுதல், நம்பிக்கை,கொள்கைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துபவர்கள் மணம் முடிக்க இருப்பவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை கவனிக்கத் தவறி விட்டனர்.

இதன் விளைவு இவர்கள் வாழ்வில் மோதல்களும், சண்டைகளும்! இறுதியில் தனது விருப்பத்தோடு ஒத்துப் போகின்ற ஒரு துணையைத் தேடிச் செல்கின்றர்கள்.

அப்டிப்பு, பதவி, வருமானம், திறமை,நோய்கள் ஆகியவற்றை மறைத்து தவறான தகவல்களைத் தந்து முடிக்கப்பட்ட திருமணங்களும் சண்டை,சாச்சரவில் முடிகின்றன. இத்தகைய திருமணம் விவாகரத்தில் முடியாலம் அல்லது கள்ள உறவிற்கு இட்டுச் செல்லலாம்.

வறுமையும் பொருளாதார ஸ்திரத்தன்மையும் இல்லாத குடும்பங்களும் இத்தகைய தவறுக்கு ஆளாகின்றன.

குடிகாரக் கணவன், வேலைக்குச் செல்லாத ஊதாரிக் கணவன் இவர்களால் ஏற்படும் நெருக்கடிகளிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேறு ஒருதுணையிடம் செல்கின்றனர்.

தாம்பத்திய வாழ்வில் திருப்தியுறாத நிலை சிலரை கள்ள உறவுக்கு இட்டுச் செல்கிறது. இதற்கு உடல் மற்றும் மனம் சார்ந்த காரணங்கள் உண்டு.

அன்பு ஆதரவு இல்லாத உறவுகள்,சண்டை சச்சரவு நிறைந்த சூழலில் வாழ்பவர்கள் அன்பைத்தரும் ஒருவனை ஒருத்தியை நாடிச் செல்கின்றனர்.

மேற்கூறப்பட்ட அனைத்துச் காரணங்களினாலும் திருமண பந்தத்தில் விரிசல் ஏற்படுகின்றன இவர்கள் சட்டப்பூர்வமான மணவிலக்குப் பெற விரும்பினாலும் அது மிகவும் சிக்கலாக ஆகிவிட்டது.

கால தாமதம் ஆகிறது என்பதாலும் இன்னும் சிலர் குடும்ப கெளரவம், குழந்தைகளின் எதிர்காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மணவில்லக்குப் பெற முயற்சி செய்வதில்லை. இத்தகைய சூழ்நிலைகளில் உள்ள உறவுகள் வழி தவறுகின்றன.

திருமணங்களை நீண்ட காலத்திற்குத் தள்ளிப் போடுவதால் தமது ஆசைகளுக்கு வடிகாலாக ஏற்கனவே திருமணமான ஒருவனோடு ஒருத்தியோடு உறவு கொள்கின்றனர்.

கணவனும், மனைவியும் நீண்ட நாட்களாகப் பிரிந்திருந்தாலும் கள்ள உறவுகள் உருவாகின்றன.

நீண்ட நாட்களாகப் பிரிந்திருக்கும் பெரும்பாலான குடும்பங்களில் இது நிகழ்கின்றன என்று சொல்ல முடியாது.

மற்ற குடும்பங்களை விட இந்தக் குடுமபங்களில் இதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஒழுக்கத்தில் மிகவும் பிடிப்புள்ளவர்கள் ஒழுக்கக்கேட்டிலிருந்து தம்மைக் காத்துக் கொள்கின்றனர். ஆனால் பலவகையான மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

ஆபத்தான இணைய நட்பு வீட்டுக்குவீடு கணினி கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும் இதன் வழி நாம் பெறும் அனுபவங்கள் போற்றத்தக்கதாய் இல்லை.

ஆர்குட்டில் ஆரம்பித்து, பேஸ்புக்,டிவிட்டர்- என நீளும் இணைய தளத் தொடர்புகள் ஏழுகடல், ஏழுவானம் தாண்டி பத்திரமாகப் பாதுகாக்கப்படும் இராஜகுமாரியைக்கூட எளிதில் வசப்படுத்தும் நவீன சிலந்தி வலையாக அமைந்துள்ளது.

இப்படி இன்றைய அறிவியல் பொறிகளின் மீது நாம் பழியை அடுக்கியுரைத்தாலும் சில பல தவறுகள் நம்பக்கம் இருப்பதையும் சுயபரிசோதனை செய்ய கடமைப்பட்டிருக்கிறோம்ஆ

ஆண்களும் பெண்களும் எவ்விதத் தடையுமின்றி நெருங்கிப் பழகுவதாலும் ஆபத்துகள் விளைகின்றன. வீட்டிலோ, அலுவலகத்திலோ சந்தித்து சில வார்த்தைகள் பரிமாறிக் கொண்டோம் என்ற நிலையைத் தாண்டும் போது விளைவுகள் மோசமாகின்றன.

கூட்டுக் குடும்பங்களில் இந்த ஆபத்துகள் அதிகம் இருக்கின்றன. உறவுகளில் ஒரு இடைவெளி நிர்ணயம் செய்து கொண்டால் இத்தகைய ஆபத்துகளைத் தவிர்க்கலாம். கணவரின் நண்பர்களிடமும் இடைவெளி விட்டே தேவை ஏற்பட்டால் மட்டுமே பேச வேண்டும்.

வீட்டிற்கு வெளியே கள்ள உறவுக்கான வாய்ப்புகள் அதிகம்.இதில் முதலிடம் வகிப்பது வேலை பார்க்கும் அலுவலகங்களே! எவ்வித தவறான எண்ணமும் இல்லாமல் சாதாரணமாகப் பழக ஆரம்பித்துப் பின்னர் தனது கஷ்டங்களையும், மன உளைச்சல்களையும் பரிமாறுவதுடன் நாளடைவில் குடும்ப ரகசியங்களைப் பேச ஆரம்பித்து விடுகின்றனர். தீய எண்ணம் கொண்டவர்கள் இதனை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வர்.

அலுவலகத்தில் நடக்கும் விழாக்கள், பார்ட்டிகள், மதுபரிவர்த்தனைகள் நடைபெறும் நிகழ்ச்சிகள்,நடன நிகழ்ச்சிகள் ஆகியவையும் கூடா உறவுக்கு வழிவகுக்கும் செயல்காளகும்.

அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் தமது பொறுப்பின் கீழ் இருக்கும் பெண்களை பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவற்றின் மூலம் ஆசைகாட்டியும், இணங்க மறுப்பவர்களை அச்சுறுத்தியும் தமது இச்சைகளுக்கு அடிபணிய வைத்த சம்பவங்களும் சில வேளைகளில் பெண்களே உயர் அதிகாரிகளை வளைத்துப் போட தங்களையே தரத்துணிந்து விடுகின்ற சம்பவங்களும் மீடியாவில் அடிக்கடி அடிபட்ட செய்திகள்.

வறுமை வேலை வாய்ப்பின்மை காரணமாக தவறான உறவுகளில் சில பெண்கள் ஈடுபடுகின்றனர்.இன்னும் சிலரோ ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நுகர்வுக் கலாச்சாரத்திற்கு அடிமைப்பட்டு தமது கற்பைக் கொடுத்து விடுகின்றனர்.சிலர் தனது துணையை பழிவாங்குவதற்காகவும் கள்ள உறவை நாடுகின்றனர். தனது துணையின் மீதுள்ள கோபத்தை இவ்விதம் வெளிப்படுத்துகின்றனர்.

தீர்வுகள்

குடும்ப அமைப்பில் கிடைக்கும் மகிழ்ச்சியும் நிம்மதியும் கள்ள உறவுகளில் ஒரு போதும் கிட்டாது. தற்காலிகமாகக் கிடைக்கும் இன்பத்திற்காக நிலையான இன்பத்தினை இழந்து விடுபவர்களை மூடர்கள் எனலாம்.

Wednesday, October 24, 2018

காரணம் இல்லாமல் என்னுடன் உரசினார் ! திருட்டு பயலே இயக்குனர் மீது அமலாபால் பாலியல் புகார் !

பாடகி சின்மயி ஆரம்பித்து வைத்த மீடூ பிரச்சனை முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில் ‘திருட்டுப்பயலே’ இயக்குனர் சுசிகணேசன் மீது சமீபத்தில் கவிஞரும் அந்த படத்தின் துணை இயக்குனருமான லீலா மணிமேகலை பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியிருந்தார் என்பது தெரிந்ததே. அவர் மீது ரூ.1 மான நஷ்ட வழக்கையும் சுசிகணேசன் பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் ‘திருட்டுப்பயலே படத்தின் நாயகி அமலாபாலும், சுசிகணேசன் மீது மீடூ குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியபோது, ‘ இயக்குனர் சுசிகணேசனின் இரட்டை அர்த்த தொனித்த பேச்சு, முகம் தெரியா யாருக்கோ அவர் கூறும் பரிந்துரைகள், காரணம் இல்லாமல் உடலை ஒட்டி உரசும் மனப்பான்மை என பல்வேறு சங்கடங்களை நான் சந்தித்துள்ளேன். இதை வைத்து அந்த படத்தில் துணை இயக்குனராக பணிபுரிந்த லீலா மணிமேகலை என்ன பாடுபட்டு இருப்பார் என்பது எனக்கு புரிகிறது என்று அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார். அமலாபாலின் இந்த குற்றச்சாட்டால் சுசிகணேசன் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
#metoo
#amalapal
#metoo_amalapal


Monday, October 22, 2018

பெண் என்பதால் ஏற்படும் சங்கடங்களை உரக்கச் சொல்வதே பெண்களின் அரசியல்.. #MeToo⁠ ⁠ #MeTootamil #MeTooIndiachinmayi #feminist

பெண் என்பதால் மட்டுமே கிடைக்கும் சலுகைகளை சத்தமின்றி அனுபவித்துக் கொண்டு.. #femaleprivilege #WomensRight #Reservation
பெண் என்பதால் ஏற்படும் சங்கடங்களை உரக்கச் சொல்வதே பெண்களின் அரசியல்.. #MeToo⁠ ⁠ #MeTootamil #MeTooIndiachinmayi #feminist

#metoo lavanya l Narayanan

My friend works multiple jobs and works for a family-run magazine business. The harasser, her editor, was a 60-year-old man. The messages she got were often late in the night and very inappropriate, sometimes sexual. Note the time and the persistence. #MeToo⁠ ⁠ #TimesUp⁠ ⁠